முழுகோதுமை ரொட்டிகளும்
நிஜ ப்ரென்சு ஆட்களும்
காண்களும் சொல்தாக்களும்
மல்லாட்டை கொட்டைகளும்
மணக்குள விநாயகரின்
அடுத்த வீதியில் அன்னையும்
பாறாங்கற்கள் தடுப்பு
கடற்கரையும்
ஜவ்வுதாள்களுமாய்
நிறைந்து கிடக்கும்
அந்த வாழ்வில்
கொஞ்சமாய் தேடிக் கண்டறிய
கொஞ்சம் நானும்
இருக்கிறேன்தான்
-----------------------------------------
சவுக்குமரக் கட்டைகள்
எரித்து சூடாக்கிய
தைலமர இலைகள்
மிதக்கும் அந்த
பால்யகால குளியல்நீரின்
வாசமும் வெதுவெதுப்பும்
எல்லா மழைகளிலும்
எங்கனம் இருப்பதென்பது
மட்டுமே
இன்றுவரை மழை என்னிடம்
சொல்ல மறந்த ரகசியம்
----------------------------------------
இத்தனைச் சிறிய சாளரம்
காட்டிய மழையின்
குதூகலம் இவ்வளவெனில்
முழு மழை காண்பதென்பது
மெலிதாய் அச்சமூட்டுவதாய்தான்
இருந்து விடுகிறது
---------------------------------------
தொடர்ந்து மனிதர்கள்
விழுங்கும் ராட்சதன்
தன்னையுமறியாமல்
கண்ணயர்ந்ததுபோலே
கிடக்குமிந்த
மாநகரம் பெருமழையில்
-----------------------------------
ஒரு பெருமழைக்குப் பின்னான
வெயில் அமர்ந்திருக்கும்
நாற்காலிகள்தான்
எத்தனை அழகானவை
மழையைப் போலவே
---------------------------------------
சிறந்த ஆறுதல்போல்
பொழியும் இந்த இரவை
எந்தக் காயத்தின் மீது
பூசிக் கொள்வது
எனும் தடுமாற்றமும்
ரம்மியமாய்தான் இருக்கிறது
--------------------------------------
குறுகிய பாதையின்
முடிவில்
விரிந்து கிடக்கும்
கடலாய்
கிடக்குமிந்த இரவை
மழை மோகிக்கும் காட்சி
ஏனித்தனை
நாணங்கொள்ள வைக்கிறது
----------------------------------------
நிஜ ப்ரென்சு ஆட்களும்
காண்களும் சொல்தாக்களும்
மல்லாட்டை கொட்டைகளும்
மணக்குள விநாயகரின்
அடுத்த வீதியில் அன்னையும்
பாறாங்கற்கள் தடுப்பு
கடற்கரையும்
ஜவ்வுதாள்களுமாய்
நிறைந்து கிடக்கும்
அந்த வாழ்வில்
கொஞ்சமாய் தேடிக் கண்டறிய
கொஞ்சம் நானும்
இருக்கிறேன்தான்
-----------------------------------------
சவுக்குமரக் கட்டைகள்
எரித்து சூடாக்கிய
தைலமர இலைகள்
மிதக்கும் அந்த
பால்யகால குளியல்நீரின்
வாசமும் வெதுவெதுப்பும்
எல்லா மழைகளிலும்
எங்கனம் இருப்பதென்பது
மட்டுமே
இன்றுவரை மழை என்னிடம்
சொல்ல மறந்த ரகசியம்
----------------------------------------
இத்தனைச் சிறிய சாளரம்
காட்டிய மழையின்
குதூகலம் இவ்வளவெனில்
முழு மழை காண்பதென்பது
மெலிதாய் அச்சமூட்டுவதாய்தான்
இருந்து விடுகிறது
---------------------------------------
தொடர்ந்து மனிதர்கள்
விழுங்கும் ராட்சதன்
தன்னையுமறியாமல்
கண்ணயர்ந்ததுபோலே
கிடக்குமிந்த
மாநகரம் பெருமழையில்
-----------------------------------
ஒரு பெருமழைக்குப் பின்னான
வெயில் அமர்ந்திருக்கும்
நாற்காலிகள்தான்
எத்தனை அழகானவை
மழையைப் போலவே
---------------------------------------
சிறந்த ஆறுதல்போல்
பொழியும் இந்த இரவை
எந்தக் காயத்தின் மீது
பூசிக் கொள்வது
எனும் தடுமாற்றமும்
ரம்மியமாய்தான் இருக்கிறது
--------------------------------------
குறுகிய பாதையின்
முடிவில்
விரிந்து கிடக்கும்
கடலாய்
கிடக்குமிந்த இரவை
மழை மோகிக்கும் காட்சி
ஏனித்தனை
நாணங்கொள்ள வைக்கிறது
----------------------------------------
No comments:
Post a Comment