இன்று முழுதாய்
ஒரு நிலா காய்ந்தது
மிக அருகில்
கொஞ்சம் கொஞ்சமாய்
களங்கம் வழித்தெடுத்து
நெற்றிப் பொட்டென
வைத்துக் கொண்டதும்
அது நிலா போலவே இல்லை
சில அடி தொலைவில்
விலகி நிற்கும் போது
தெளிவாய் தெரிந்திருக்கும்
இரண்டாம் சிலுவையும்
பாரமிழந்திருந்தது அப்போதைக்கு
இங்கிருந்து விழுந்த
கண்ணீர் துளிகள்
மீதி களங்கமும்
அகற்றியிருக்கலாம்தான்
எனினும்
களங்கமுற்ற நிலாக்களே
கள்வெறி கொள்ள
வைக்கின்றன
எப்போதும்
------------------------------------------------------
எரிமலைச் சாம்பல்
படிந்திருந்த நீலச்சிறகுகளை
அலச
ஒரு மழை வேண்டியிருந்ததுதான்
அதோ உருகி வழிகிறது
சிறகுகள்
இது அமிலமழையெனில்
அத்துனை குளிர்மை
எப்படிச் சாத்தியமென
யூகிக்கவும் அவகாசமின்றி
மரணிக்கிறது பறவை
நீலம் பாரித்திருந்தது வானம்
----------------------------------------------------------
ஒரு நிலா காய்ந்தது
மிக அருகில்
கொஞ்சம் கொஞ்சமாய்
களங்கம் வழித்தெடுத்து
நெற்றிப் பொட்டென
வைத்துக் கொண்டதும்
அது நிலா போலவே இல்லை
சில அடி தொலைவில்
விலகி நிற்கும் போது
தெளிவாய் தெரிந்திருக்கும்
இரண்டாம் சிலுவையும்
பாரமிழந்திருந்தது அப்போதைக்கு
இங்கிருந்து விழுந்த
கண்ணீர் துளிகள்
மீதி களங்கமும்
அகற்றியிருக்கலாம்தான்
எனினும்
களங்கமுற்ற நிலாக்களே
கள்வெறி கொள்ள
வைக்கின்றன
எப்போதும்
------------------------------------------------------
எரிமலைச் சாம்பல்
படிந்திருந்த நீலச்சிறகுகளை
அலச
ஒரு மழை வேண்டியிருந்ததுதான்
அதோ உருகி வழிகிறது
சிறகுகள்
இது அமிலமழையெனில்
அத்துனை குளிர்மை
எப்படிச் சாத்தியமென
யூகிக்கவும் அவகாசமின்றி
மரணிக்கிறது பறவை
நீலம் பாரித்திருந்தது வானம்
----------------------------------------------------------
No comments:
Post a Comment