Sunday 16 March 2014

இடைஞ்சல்

உப்புநீர் ஓடையருகே
அவர்கள் இருந்தனர்
வயதுகளின் இடைவெளியில்
ஒரு மரத்தினையே
நடலாம்
சிறு வலைக்கூடையில்
எதையோ சேகரித்தனர்
அருகில் சென்றவளை
கவனிக்கவேயில்லை
தேர்ந்த ஞானியின்
மொழியில் இயற்கையிடம்
உரையாடிக் கொண்டிருந்தனர்
போலும்
நீரில் அமிழ்த்தியக் கூடையை
லாவகமாய் உயர்த்தியதும்
மிகச் சிறிய மீன்கள்
துள்ளியபடியிருந்தன
உற்சாகத்தில்
கத்தியவளைக் கண்டதும்
சன்னமாய் அதிர்ந்து
மிக வேகமாய்
அவ்விடம் அகன்றனர்
தவமொன்றைக் கலைத்திட்ட
வலியுடன்
மேகநிழல் மிதக்கும் நீரிலேயே
நிற்பவளின்
பாதங்களை வட்டமிடும்
சிறுமீன்கள்
மெல்லக் கொறிக்கத்
துவங்கியிருந்தன
என் நிழலின்
கூர்முனைகளையும்

No comments:

Post a Comment