வரைபடத்தில்
தவறான இடத்தில் குறித்துவிட்டேன்
பறவைகள் சரணாலயத்தை
கிர் சிங்கங்களுக்கானது அல்லவா
கன்ஹா புலிகளோ
சரிதான்
ஒரிஸ்ஸாவிலிருந்து தவறி
வேறெங்கெல்லாமோ
விழுந்திருக்கிறேன்
இடையில் ஒரு மரப்பாலம் செல்ல
சுற்றி வலைகளால் பின்னியிருந்த
மைசூர் பூங்காவில் இளரோஜாவண்ணத்தில்
அந்தப் பிளெமிங்கோ பறவைகளைக்
கண்டபோதும்
இதே குழப்பம்தான்
இவைகளின் எத்தனையாவது
பரிணாம வளர்ச்சியில்
கிர் அல்லது கன்ஹா சென்றடையும்
அடைந்துதான் கிடப்பதாயின்
சிறகுகளைவிட
பிடரியும் வன்மமும் மேல்
புலியின் வாலுடன்
ஒரு பிளெமிங்கோ காணும்போது
நான் மிகச்சரியாய்
குறித்துக்கொண்டிருப்பேன்
சிலிகா ஏரியில்
பாண்டாக்களின் பூங்காவை
தவறான இடத்தில் குறித்துவிட்டேன்
பறவைகள் சரணாலயத்தை
கிர் சிங்கங்களுக்கானது அல்லவா
கன்ஹா புலிகளோ
சரிதான்
ஒரிஸ்ஸாவிலிருந்து தவறி
வேறெங்கெல்லாமோ
விழுந்திருக்கிறேன்
இடையில் ஒரு மரப்பாலம் செல்ல
சுற்றி வலைகளால் பின்னியிருந்த
மைசூர் பூங்காவில் இளரோஜாவண்ணத்தில்
அந்தப் பிளெமிங்கோ பறவைகளைக்
கண்டபோதும்
இதே குழப்பம்தான்
இவைகளின் எத்தனையாவது
பரிணாம வளர்ச்சியில்
கிர் அல்லது கன்ஹா சென்றடையும்
அடைந்துதான் கிடப்பதாயின்
சிறகுகளைவிட
பிடரியும் வன்மமும் மேல்
புலியின் வாலுடன்
ஒரு பிளெமிங்கோ காணும்போது
நான் மிகச்சரியாய்
குறித்துக்கொண்டிருப்பேன்
சிலிகா ஏரியில்
பாண்டாக்களின் பூங்காவை
No comments:
Post a Comment