Sunday, 16 March 2014

சுவர் வானம்

சுவர்களால் அடைக்கப்பட்டது
இங்கிருந்த வானம்
ஒரு வெளியூர் பயணத்தில்
மிக எதேச்சையாய்
சந்தித்தே விட்டேன்
அந்த வானத்தை
முகில் கவிந்து
கவர்ச்சியேதும் காட்டாது
நேரே அணுகி 
அணைத்துக் கொண்டது
இப்போது ஒரே ஒரு சந்தேகம்தான்
என் மழைகளை
இந்த வானிலேயே
பொழிந்துவிட
எந்தச் சுவர்களிடம்
அனுமதி கேட்க வேண்டும்

No comments:

Post a Comment