கர்ப்ப சிசுவின்
ஒற்றை எத்தலில்
திடுக்கிட்டு விழித்து
அடுத்த அசைவிற்காய்
காத்திருந்த இடைவெளியில்
சூழும் நித்திரையின்
கனவில்
சிசுவோடு எத்திக்
கொண்டிருந்தேன்
உள்ளிருந்து நானும்
ஒற்றை எத்தலில்
திடுக்கிட்டு விழித்து
அடுத்த அசைவிற்காய்
காத்திருந்த இடைவெளியில்
சூழும் நித்திரையின்
கனவில்
சிசுவோடு எத்திக்
கொண்டிருந்தேன்
உள்ளிருந்து நானும்
No comments:
Post a Comment