Thursday, 28 March 2013

எண்ணிக்கை மறந்த காதல்கள்

இத்தனைக் காதல்களை 
வைத்துக் கொண்டு 
என்ன செய்வது 

அன்பிலாழ்ந்த விண்ணப்பங்கள் தந்தும் 
இருக்கும் பெருமைகள் சொல்லியும் 
இல்லாத வலிமைகள் சுட்டியும் 
அற்புதமேபோல் உருவகித்தும் 
அசாத்திய பொறுமை கொண்டும் 
சமரசமில்லா இரக்கம் யாசித்தும் 

கச்சிதமாய் நகர்த்தி
மையப்புள்ளி வைத்து 
மனதோடு உடலும் 
சுட்டுப் பொசுக்கி 
வாசம் புகையும் துப்பாக்கியில் 
பூந்தோட்டாக்கள் ரொப்பி 
மற்றுமொரு இலக்கு 
நிர்ணயம் செய்தும் 
எண்ணிக்கையில் தீரா 

இத்தனைக் காதல்களை 
வைத்துக் கொண்டு 
என்னதான் செய்வது 
காதலைத் தவிர

No comments:

Post a Comment