Thursday, 28 March 2013

குறுங்கவிதைகள்

ஏதோ ஒரு 
பறவைக்கான 
கனி உண்ணுகிறேன் 
எனக்கான மரமொன்றை 
ஏதோ ஒரு பறவை 
எச்சமிட்டிருக்கலாம்

****************************

குழந்தை வரைந்த 
வீட்டின் ஜன்னல்கம்பி 
நெளிந்திருந்தது 
தூரிகைத் தச்சன் 
செதுக்க விழைகிறான்


****************************


விலகி நின்று 
ரசிக்கும்போது 
மட்டுமே சில 
ஈர்க்கின்றன


****************************

No comments:

Post a Comment