வனமெரிக்கும்
அக்னிக் குஞ்சுகளை
வீட்டினுள் பொதிந்து
விளக்கின் சுடராக்குதல்
விருப்பத்திற்கு
அணைத்திடவே
**************************
வெயில் உருக்கிய
தார்ச் சாலை
பாதம் அழுந்தி
உள்செல்லும்போது
பூமியை அழுத்திய
பெருமிதம்
***************************
தீவிரமாய் எழுதிக் கொண்டிருக்கும்
தாயின் பின்னிருந்து
கண்கள் பொத்தும் மழலைபோல்
அமைந்து விடுகின்றன
சில வரிகள்
இருப்பது தெரிந்தும்
காட்டிக் கொடுக்க
மனமற்று
*****************************
அக்னிக் குஞ்சுகளை
வீட்டினுள் பொதிந்து
விளக்கின் சுடராக்குதல்
விருப்பத்திற்கு
அணைத்திடவே
**************************
வெயில் உருக்கிய
தார்ச் சாலை
பாதம் அழுந்தி
உள்செல்லும்போது
பூமியை அழுத்திய
பெருமிதம்
***************************
தீவிரமாய் எழுதிக் கொண்டிருக்கும்
தாயின் பின்னிருந்து
கண்கள் பொத்தும் மழலைபோல்
அமைந்து விடுகின்றன
சில வரிகள்
இருப்பது தெரிந்தும்
காட்டிக் கொடுக்க
மனமற்று
*****************************
No comments:
Post a Comment