Thursday, 28 March 2013

ரசனைகளின் விதிகள்

அவரவர் ரசனை 
அவரவருக்கு மட்டுமாய் 
மயில்கண் வேட்டியும் 
மடித்து விட்ட 
முழுக்கை சட்டையும் 
நெற்றியிலிட்ட 
திருநீறும்
பொருந்தாத
குளிர்கண்ணாடியும்
இதழோர
விஷம புன்னகையும்
அடர் மீசையும்
தங்க முலாமிட்ட
கைக் கடிகாரமும்
சுருள்முடி கிராப்பும்
ஒற்றைக்கால் மடக்கி
வேட்டி மடித்துக்கட்டும்
லாவகமும்
சூழலுக்கேற்றாற்போல்
மிரட்டும் குழையும்
குரலும்
முழங்கையில் இருக்கும்
சிறு தேமலும்
ஒட்ட வெட்டிய
பத்து நகங்களும்

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
வாய்த்தாலும்
ரசனைகள் விதிகளுக்குட்பட்டது

No comments:

Post a Comment