Tuesday, 16 July 2013

மாற்றம்செய் விசையாதல்



நிறப்பிரிகைகளற்ற
தெளிவிசும்பென விரிந்து
வண்டுணாமலர் மீதும்
பரவி சுகிக்கும்
மென்வளி மனமுற்று
கைக்கொள்ளா கூலம்பெற்ற
வறியவன் விழிதேங்கும்
நீர்வகையறியும் நோக்கோடு
விதிக்கப்பட்ட எதையும்
தனக்குகந்த விதியென
மாற்றம்செய் விசையாகி
கரித்துத் தளும்பும்
முந்நீரளவு ஆழறிவுபெற்றும்
சமன்கொண்ட சூத்திரங்களுக்காய்
யுகங்களின் காத்திருப்பினை
மனமுவந்து கொண்டதுவும்
மாதர்பிறப்பெல்லாம்
பெருந்தவ நீட்சியென
பாழுலகுக்கு உரைத்திடவே


No comments:

Post a Comment