Tuesday, 16 July 2013

நெய்தல்நிலம் புகுதல்



நீண்டு கொண்டே செல்லும்
கால வாகனத் தடத்தின்
இடையிடைத் துளிர்த்து
முகிழ்த்து மணம் வீசும்
நினைவெச்சங்களின்
குறுங்காடு கடந்து
நெய்தல் நிலம் புகுந்து
ஓடி மறைந்த
ஒற்றை வரையாடினைத்
தேடித் தொலையவும்
கொஞ்சம் காலம்
தேவையாய்தான் இருக்கிறது
கூடுதலாய்

No comments:

Post a Comment