மரமானவள்
----------------------
ஸ்தல விருட்சம்
இல்லா ஆலயங்களை
அவள் நாடுவதேயில்லை
சீத்தாப்பழ மரம்கொண்ட
எந்த இல்லத்தின் மீதும்
எளிதில் காதல் வயப்படுபவள்
வேப்பமரச் சருகுகளை
தனக்கான மடல்களென
எண்ணியே கூட்டுபவள்
செவ்வாழைக் கன்றுக்காய்
மலைப்பிரயாணப் பொழுதுகளில்
எதிர்ப்படுவோரிடம் விசாரிப்பவள்
மூன்றடுக்கு நந்தியாவட்டை
அவளுடன் ஆலோசித்தப்
பிறகே மலர்வதாய் மகிழ்பவள்
புத்தகக் காகிதத்திலும் சாளரத் தேக்கிலும்
சந்தனப் பூச்சிலும் விசிறிக் காம்பிலும்
மரங்களையே தேடுபவள்
ஆதி மரமொன்றின்
பெண் பிறப்பாய் இருக்கலாம்
No comments:
Post a Comment