Tuesday, 16 July 2013

வலியுணரும் வளி




வலியுணரும் வளி
--------------------------------

அடர்பிசினாய்
உடலெங்கும் மேய்ந்து
சீழொழிகி வீச்சமெடுக்கும்
அந்தப் பார்வை பிரித்தெடுக்க
அலட்சியப் புன்னகையொன்று
தொட்டுத் தடவி
மெல்ல மெல்ல
மேனி மறந்து
நடந்துலாவும் இதுவானது
நாளொரு பொழுதில்
வற்றித் தொய்ந்துபோகும்
வளிநிறை வெற்றுக்கூடென
உணர வைக்கும்
அவர்களும்தான்
ஞானகுரு எமக்கு

வேறோர் முறையில்

No comments:

Post a Comment