சொற்களற்ற வெளி
மோன சஞ்சாரம்
களி பேருவுவகை
தன்னுதிர ஓட்டம்
தானுணறும்
தன்னிகரில்லாத்
தனியுலகம்
இரவுக்கப்பால்
விரி விசும்பெலாம்
இருண்மை பூசிய
அடர் வாழ் தடம்
கொஞ்சம் நெகிழ்வு
மீதியெலாம்
கொஞ்சும் தனிமை
பாழ் வீதி முழுக்க
பால் வீதி மணம்
இயற்கை எய்திட
எங்கும் பேராவல்
வகைக்கொன்றாய்
உயிர்கள் சுமந்த
பெருங்கலம்
தூரத்தே இரையும்
பிரளய ஊழ்
சிறு பிளவு
குளம்புகளின் கீழ்
No comments:
Post a Comment