Tuesday, 16 July 2013

மழையிரவின் பிடியில்


மழையிரவின் பிடியில் 
-------------------------------

மெய்யெழுத்துகளின்
மேலிட்டப் புள்ளிகளாய்
மெய்களின்
மேல்விழும் துளிகள்
நிலமெங்கும் கவிபுனைந்து 
வழிந்தோடும் உயிரோவியம்
நீர்மை படர்ந்தபடி

-----------------------------------------

உள்ளோடிய
ஒற்றை மழைத்துளி
தன்வனம் புகுந்ததாய்
எங்கோ ஒளிந்தது
நாளைய துளிர்ப்பில்
கண்டுணர்ந்திடும்
எங்கோ பூத்திடும்
காட்டுப்பூவும்
----------------------------------------------------
திடீர் மழை
உடலோடு ஒட்டிய
பருத்தியாடை
அறைபுகுந்ததும்
பிய்த்தெறிய பிய்த்தெறிய 
முளைத்தபடி இருக்கும் 
மேலெங்கும் படிந்த 
வயதுவரம்பில்லா
அழுக்குப்பார்வைகள்

---------------------------------------------

சதுப்புநிலக் காட்டின்
ஈரவெப்பம் கொண்டு
பெருநகரம்
பெருமூச்சுடன்
குழைந்து நெளிகிறது
வரமான மழையிரவில்
-----------------------------------------------------------

No comments:

Post a Comment