இரவுகள் ஆன அவள்
------------------------------
கருவண்ணக் கண்ணாடி வளைகள்
அணிவதில் அதீத விருப்பம்
வளைகளின் இடையில்
சப்தமிடுவது
இரவுகளாய் இருந்திடின்
நொறுங்குதல் குறித்தும்
கவலையேதுமில்லை
அணிவதில் அதீத விருப்பம்
வளைகளின் இடையில்
சப்தமிடுவது
இரவுகளாய் இருந்திடின்
நொறுங்குதல் குறித்தும்
கவலையேதுமில்லை
-----------------------------------------------------
மழையிரவு
கிளரும் வாசங்களில்
எதையும்
பாகுபடுத்த இயலுவதில்லை
பொல்லாக்காமம் மட்டும்
நாசி நிரப்பி
புன்னகைத்துச் செல்கிறது
மழைத்துளி வசமாய்
கிளரும் வாசங்களில்
எதையும்
பாகுபடுத்த இயலுவதில்லை
பொல்லாக்காமம் மட்டும்
நாசி நிரப்பி
புன்னகைத்துச் செல்கிறது
மழைத்துளி வசமாய்
-------------------------------------------------------
வனங்களுக்கான
பெருமழை காணக்
கிடைத்தது
நனைதலுக்கான பெருவனம்
எங்கேனும்
உறங்கிக்கொண்டிருக்கலாம்
எழுப்ப வேண்டாம்
தண்மழை வழியறியும்
பெருமழை காணக்
கிடைத்தது
நனைதலுக்கான பெருவனம்
எங்கேனும்
உறங்கிக்கொண்டிருக்கலாம்
எழுப்ப வேண்டாம்
தண்மழை வழியறியும்
-------------------------------------------------------
ஆம்
வேறுபாடு உண்டுதான்
இலைநுனி தேங்கி
நிர்மால்யமாய் வீழும்
ஒற்றைத்துளிக்கும்
குடைக்கம்பி முனை
இறுகித் தவிக்கும்
அந்தத் துளிக்கும்
வேறுபாடு உண்டுதான்
மழையே சொன்னது
வேறுபாடு உண்டுதான்
இலைநுனி தேங்கி
நிர்மால்யமாய் வீழும்
ஒற்றைத்துளிக்கும்
குடைக்கம்பி முனை
இறுகித் தவிக்கும்
அந்தத் துளிக்கும்
வேறுபாடு உண்டுதான்
மழையே சொன்னது
--------------------------------------------------------
கிறங்கித் தவிக்கும்
மாநகரத் தொட்டிச்செடி
சர்வ வல்லமையோடு
இறங்கிப் பொழியும்
வனமழை
மாநகரத் தொட்டிச்செடி
சர்வ வல்லமையோடு
இறங்கிப் பொழியும்
வனமழை
--------------------------------------------------------
No comments:
Post a Comment