வெண்முத்து மாலைபோல்
அத்தனை
வசீகரிப்பதில்லைதான்
கார்னெட் மாலைகள்
ஒழுங்கென்பது இல்லாது
பலவடிவப் பொடிக்கற்கள்
கோர்த்ததாய்
காப்பித்தூள்வண்ண
அந்த மாலைமேல்
ஏனத்தனைப் பிடித்தம்
முன்பற்களால் மாலைக் கடித்தபடி
யோசிப்பதில்
ஏனத்தனை மெய்மறத்தல்
உறக்கத்தில் புரள்கையில்
கனவாய் கிசுகிசுக்கும்
அந்த நெருடலில்
ஏனத்தனை ஏகாந்தம்
ஏனிந்த விழிகள்
காப்பித்தூள்வண்ணமாய்
இருக்கின்றன
என்ற
அன்றைய கேள்விக்குப்
புன்னகைத்த நொடியில்தான்
கார்னெட்கள்
உயிர்பெற்றிருக்க வேண்டும்
அத்தனை
வசீகரிப்பதில்லைதான்
கார்னெட் மாலைகள்
ஒழுங்கென்பது இல்லாது
பலவடிவப் பொடிக்கற்கள்
கோர்த்ததாய்
காப்பித்தூள்வண்ண
அந்த மாலைமேல்
ஏனத்தனைப் பிடித்தம்
முன்பற்களால் மாலைக் கடித்தபடி
யோசிப்பதில்
ஏனத்தனை மெய்மறத்தல்
உறக்கத்தில் புரள்கையில்
கனவாய் கிசுகிசுக்கும்
அந்த நெருடலில்
ஏனத்தனை ஏகாந்தம்
ஏனிந்த விழிகள்
காப்பித்தூள்வண்ணமாய்
இருக்கின்றன
என்ற
அன்றைய கேள்விக்குப்
புன்னகைத்த நொடியில்தான்
கார்னெட்கள்
உயிர்பெற்றிருக்க வேண்டும்
தோழி
ReplyDeleteஉங்கள் கவிதைகள் அத்தனை சுயமாக இருக்கின்றன. அண்மையில் என்னால் வாசிக்கப்பட்ட சுயமான கவிதைகள் இவை. கவனம் பெறாமல் போன கவிதாயினிகள்!
- அப்பணசாமி
jeon08@gmail.com