Tuesday, 2 April 2013

அழகாய் சிந்திக்கலாம்




அழகாய் சிந்திக்கலாம் 
-------------------------------------

புருவங்கள் சீர்செய்யும் பொழுது 
சமத்துவங்கள் குறித்து 
சிந்திக்கலாம் 

நனைந்த பஞ்சால் 
மெலிதாய்  வருடும்போது 
நீர் மேலாண்மை குறித்து 
சிந்திக்கலாம் 

கொதிநீரில் முகம் 
காட்டும் நேரம் 
உலக வெப்பமயமாதலும் 
சிந்திக்கலாம் 

மூடிய இமைகளின் 
மேலிருக்கும் வெள்ளரிப்பிஞ்சில் 
கலந்த விஷ உரங்கள் பற்றி 
சிந்திக்கலாம் 

ரோமங்கள் கழியும்போது
அழிந்த காடுகளை 
சிந்திக்கலாம் 

ரசாயனமில்லா பூச்சுகள் 
பூண்டு 
இயற்கையைக்  காப்பதாய் 
சிந்திக்கலாம்  

அவ்வப்போது 
லேசாய் வலிக்கும்தான் 
அழகுக்காய் அல்ல 
உலக நன்மைக்காய் 
பொறுத்துக் கொள்வதாகவே 
சிந்திக்கலாம்  

1 comment:

  1. மிக மிக அற்புதமான சிந்தனை. அழகு நிலையும் செல்லும் யுவதி ய்யர்ரவது வாசித்திருந்தால் நிச்சயம் அடுத்த முறை அங்கு செல்லும் போது இவ்வரிகள் நினைவிற்கு வரும்.

    ReplyDelete