Sunday, 7 August 2011

கனவு நினைவு

ஏதோ காரணத்திற்கு
அம்மாவிடம் திட்டு

அக்காளின் மடியில் படுத்து
எதற்கோ வாக்குவாதம்

வானில் பறக்கும் ரயிலை
தோழிக்கு காட்டுதல்

சந்தையில் சுற்றுகையில்
திடீரென இரவு கவிழ்தல்

பத்தாம் வருப்பு சீருடையணிந்து
தம்பியை அடித்தல்

வாய்த்த கணவன்
காதலனாய் கசிந்துருகுதல்

மறைந்த மழலை
உயிர்த்து வந்து பேசுதல்

கனவுகளில் திடுக்கிட்டு
எழும் ஒவ்வொரு முறையும்
நினைவுகளில் வாழ்ந்து
திரும்பிய பெருமிதம்

1 comment:

  1. நன்று தோழி:)
    மேலும் வளர வாழ்த்துக்கள்...:)
    தங்களின் அடுத்த படைப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:)
    வாழ்க வளமுடன்:)

    ReplyDelete