Tuesday 16 July 2013

குறுந்துளிகள்


குறுந்துளிகள் 
--------------------
தாய்ப்பறவையின்
நிழலெனப் படர்ந்து
நகர்கிறது மழையிரவு
அலகு சிக்கிய புழுவென
நெளியும் பெருங்காமம்
---------------------------------
கண்கள் மூடிய
கரடிபொம்மையின்
இரவெங்கும் 
வேரல் வனச் சருகுப் பெயல்
---------------------------------
ஒற்றைச் சுடரின்
நிழல் குறித்து
ஆழ்சிந்தனையில்
கனிந்த முகம்

அத்தனைக் கைகளும்
கொண்ட ஆயுதங்களை
கீழிறக்கும்வேளை
தொங்கும் நாவும்
உள்ளிழுத்துக்கொள்ள
அம்சம் அம்சம்
எவ்வளவு
அழகு அவள்
---------------------------------
குறுகிக் குறுகி
நீளும் குகையொன்று
சேர்வராயன் பின்
இவனிருப்பது
குகையின் முடிவா
வாயிலா
பதிலற்ற வெளியெங்கும்
குகை குடையுமோசை
----------------------------------

No comments:

Post a Comment